தமிழ்நாடு

tamil nadu

"சார் அந்த டயர் உங்களோடதா பாருங்க": அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடிய வீடியோ வைரல்!

By

Published : Mar 25, 2023, 1:25 PM IST

Updated : Mar 25, 2023, 1:43 PM IST

ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூரை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. வேடசந்தூர் அருகே உள்ள சேனன் கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். அப்போது திடீரென பேருந்தின் பின்பக்க டயர் கழன்டு ஓடியுள்ளது. அப்போது டயர் தனியாக கழன்டோடுவதை கண்டு சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் அரசு பேருந்தை லாவகமாக கையாண்டு சாலை ஓரமாக நிறுத்தினார். 

அதன் பின் பேருந்தின் டயரை எடுத்து வந்து பேருந்தில்  பொருத்தி உள்ளார். அப்போது அந்த வழியாக காரில் பயணித்த ஒருவர் சம்பவத்தை வீடியோ காட்சி பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளமும் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஓட்டுநர் சுதாரித்ததால் மட்டுமே 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்கள் ஏற்படாமல் உயிர் தப்பினர். ஆனாலும் இந்த சம்பவம் யாருடைய கவனக்குறைவால் நிகழ்ந்தது என போக்குவரத்து துறை விசாரணை நடத்த வேண்டும் என பலர் கோரிக்கையும் வைத்துள்ளனர். 

Last Updated : Mar 25, 2023, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details