தமிழ்நாடு

tamil nadu

லடாக்கில் கடும் பனிப்பொழிவு - போக்குவரத்து பாதிப்பு

By

Published : Jul 9, 2023, 2:53 PM IST

ஜம்மூ காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் அருகே லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் மாவட்டத்தின் மேல் பகுதியில் இன்று (ஜூலை 9) பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. கார்கில் மாவட்டத்தில் உள்ள ரங்டாம் பகுதியில் 4 முதல் 5 அங்குல அளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட காரணத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கார்கில்-ஜன்ஸ்கர் NH 301-ன் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து தற்போதைய வானிலை ஆய்வில் அரேபிய கடல் (WD) மற்றும் வங்காள விரிகுடா (பருவமழை) ஆகியவற்றால் ஈரப்பதம் நிறைந்த காற்று மற்றும் மழை அடிக்கடி ஏற்படும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் சோனம் லோட்டஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில், ஜீலம் நதியின் நீர்மட்டம் நேற்று(ஜூலை 8) வெள்ள எச்சரிக்கை குறியைத் தாண்டியுள்ளது. இது 2014-ல் பேரழிவு தரும் வெள்ளத்தைக் கண்ட மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இடைவிடாமல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 

"இன்று காலை 11 மணிக்கு ஜீலம் நதியின் நீர் மட்டம்  21.15 அடியாகவும், பாம்பூரில் 5.51 அடியாகவும், ராம் முன்ஷி பாக் பகுதியில் 19.61 அடியாகவும் பதிவாகியுள்ளது எனவும்; முன்பை விட நீர்மட்டம் குறைந்து வருகிறது" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details