தமிழ்நாடு

tamil nadu

ரேஷன் கடையில் கிலோ ரூ.60க்கு தக்காளி.. திருவண்ணாமலை மக்கள் ஆர்வம்!

By

Published : Aug 2, 2023, 1:56 PM IST

நியாய விலை கடையில் அரை கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்பட்ட தக்காளியை வாங்க குவிந்த மக்கள்

திருவண்ணாமலை:தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் முக்கிய நகரங்களில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

அந்த வகையில் இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத் துறை மூலம் தக்காளியை கொள்முதல் செய்து கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி 170 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் துர்க்கை அம்மன் கோயில் தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அரை கிலோ தக்காளி 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:இவர் காட்டுல பண மழை தான்... ஒரே நாளில் 4 லட்சம் ரூபாய்க்கு தக்காளி விற்ற விவசாயி!

ABOUT THE AUTHOR

...view details