தமிழ்நாடு

tamil nadu

13வது உலக புலிகள் தினம்: சுருளி அருவியில் சூழல் அங்காடி!

By

Published : Jul 29, 2023, 8:59 PM IST

13 ஆவது உலக புலிகள் தினத்தை முன்னிட்டு: சுருளி அருவியில் சூழல் அங்காடி

தேனி:  சுருளி அருவியில் வனத்துறை சார்பில் 13வது உலக புலிகள் தினத்தை முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூழல் அங்காடியை தேனி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களிலும், புண்ணிய ஸ்தலங்களிலும் ஒன்றாக இந்த சுருளி அருவி விளங்குகிறது. இந்த சுருளிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று(ஜூலை. 29) வனத்துறையினர் சார்பில் 13வது உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

இதன் காரணமாக சுருளி அருவியில் வனத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூழல் அங்காடியை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா திறந்து வைத்தார். இந்த சூழல் அங்காடியில் வனத்துறையின் லோகோக்கள் பொறித்த டி-ஷர்ட்டுகள், கீ செயின்கள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள துணி பைகள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. அங்காடியை திறந்து வைத்த தேனி மாவட்ட ஆட்சியர் முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சுருளி அருவியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள சாரல் விழா குறித்த இடத்தினையும், சுருளி அருவியில் உள்ள சாலை நிலவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வனத்துறையினர், சுற்றுலா வளர்ச்சித் துறையினர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details