தமிழ்நாடு

tamil nadu

5 மணிநேரம் வெறும் கையில் தீச்சட்டியுடன் நடனம்.. தேனி பகவதி அம்மன் கோயில் விழா கோலாகலம்!

By

Published : Mar 9, 2023, 11:03 AM IST

பாகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா

தேனி:பெரியகுளம் வடகரை பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி மாதத்தில் மூன்று நாள் திருவிழா நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7ஆ ம் தேதி அன்று கோலாகலமாகத் தொடங்கியது. அன்று இரவு பெண்கள் கரகம் எடுத்து வீதி உலா வந்தனர். 

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று (மார்ச் 8) விழாவின் முக்கிய நிகழ்வான, பாரம்பரிய மிக்க ஆடலுடன் வெறுங்கையால் தீச்சட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆடியவாறு தீச்சட்டி எடுத்து வீதிகளில் உலா சென்று, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

மேலும் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து பகவதி அம்மன் கோயிலில் வழிபட்டுச் சென்றனர். திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை ஆகிய தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பகவதி அம்மன் திருவிழாவில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவிற்காக 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா  

ABOUT THE AUTHOR

...view details