தமிழ்நாடு

tamil nadu

கோலாப்பூரில் கொண்டாடும் எருமைகளை அழகுபடுத்தும் பாரம்பரிய திருவிழா.. பின்னணி என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 9:12 PM IST

கோலாப்பூரில் கொண்டாடும் எருமைகளை அழகுபடுத்தும் பாரம்பரிய நிகழ்ச்சி

கோலாப்பூர் (மகாராஷ்டிரா): கோலாப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் பத்வா நிகழ்ச்சியின் போது எருமையை அலங்கரித்து ஒப்பனை செய்யும் பாரம்பரிய விழா இன்றும் கோலாப்பூரில் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், கோலாப்பூரில் உள்ள பஞ்சகங்கா ஆற்றில் காலை நேரத்தில் எருமை மாடுகளைக் குளிப்பாட்டுவார்கள்.

அதன் பிறகு, எருமை மாடுகளின் உரிமையாளர்கள் எருமைகளை கசாபா பவாடா சந்தை பகுதிக்கு அழைத்து வருகின்றனர். அங்கு எருமைகளின் முதுகில் பல வண்ணங்கள் மற்றும் பல்வேறு சமூக செய்திகள் எழுதப்படுகின்றன. மேலும் கழுத்து மற்றும் கால்களில் மணி மாலைகள், கொம்புகளில் மணிகள், ரிப்பன்கள் மற்றும் மயில் தொகைகள் ஆகியவற்றால் எருமைகள் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் பலத்த சத்தம் எழுப்பியபடி எருமை மாடுகளின் உரிமையாளர்கள் ஓட்ட அதன் பின்னால் எருமைகள் துரத்திச் செல்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எருமைகளுக்குப் பரிசுகள் எதுவும் இல்லை, யாருடனும் போட்டி இல்லை. ஆனாலும், கோலாப்பூரின் கிராமப்புற பாரம்பரிய அம்சத்தைப் பாதுகாக்க கோலாப்பூர் நகரத்திற்கு மிக அருகில் உள்ள கசாபா பவாடா கிராமத்தில் இந்த தனித்துவமான பாரம்பரிய நிகழ்வு இப்போதும் பின்பற்றப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் எருமைகளை அழகுபடுத்த பல்வேறு அழகு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எருமை மாடுகளை அழகுபடுத்தும் பட்வா நிகழ்ச்சி கோலாப்பூரில் உள்ள கசாபா பவாடாவில் மட்டும் அல்லாது ஷானிவார் பேத்தில் உள்ள கவ்லி கல்லி, பஞ்ச்கங்கா நதி காட், சாகர்மால், பச்கான் ஆகிய இடங்களிலும் ஏற்பாடு நடத்தப்படுகின்றன. இதனைக் காண சுற்றுப்புற வாசிகள் ஏராளமானோர் வருகைதருகின்றனர்.

தீபாவளி பத்வா நிகழ்ச்சியை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலவிதமான போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் பாரத்வீர் தருண் மண்டல் (Bharatveer Tarun Mandal) சார்பில் கடந்த பல ஆண்டுகளாக கோலாப்பூரில் உள்ள கசாபா பவாடாவில் தனித்துவமான எருமை மாடுகளை அழகுபடுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், "காரீஃப் பருவம் (kharif season) முடிவடைந்த பிறகு விவசாயிகள் மற்றும் அவர்களது கால்நடைகளுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி நன்றி தெரிவிக்கும் வகையில், குழந்தைகளைப் போல பராமரிக்கப்படும் எங்கள் பசுக்கள் மற்றும் எருமைகள் பல்வேறு அழகு சாதனங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. அதன் பிறகு அலங்கரிக்கப்பட்ட எருமைகள் உரிமையாளருடன் சாலையில் வந்து, உரிமையாளரின் மோட்டார் சைக்கிள் பின்னால் துரத்திச் செல்கின்றன.

இந்த பாரம்பரிய நிகழ்விற்குப் பிறகு, உரிமையாளர் எருமைகளைக் கிராம தெய்வமான வெதல்பா மற்றும் ஹனுமான் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார். இந்த தனித்துவமான பாரம்பரியம் கிராம தெய்வத்தின் தரிசனத்திற்குப் பிறகு முடிவடைகிறது. அலங்கரிக்கப்பட்ட எருமை மாடுகளைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக வருகின்றனர்" என்று கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details