தமிழ்நாடு

tamil nadu

Dr Krishnasamy: நடிகர் விஜய்க்கு ஆதரவு.. டாக்டர் கிருஷ்ணசாமி விதித்த 2 கண்டிஷன்!

By

Published : Aug 2, 2023, 11:05 AM IST

நடிகர் விஜய்க்கு ஆதரவு

தென்காசி:தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்குச் சாவடி முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அக்கட்சியின் நிறுவனர் 
கிருஷ்ணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “திராவிட கட்சிகளுக்கு அடுத்தபடியாக புதிய தமிழகம் கட்சி வளர்ந்து வரும் நிலையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டிப் போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் மதுவை ஒழிக்க புதிய தமிழகம் கட்சி நடத்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்பது தொடர்பாக நடிகர் ரஜினியிடம் பேசி உள்ளதாகவும், அதுதொடர்பாக ஓரிரு தினங்களில் நடிகர் ரஜினியைச் சந்திக்க உள்ளதாகக் கூறினார். மேலும், வாக்காளர்கள் ஓட்டுக்குப் பணம் வாங்குவது தவறு என்பது குறித்துப் பேசிய  நடிகர் விஜய். மேலும், மது ஒழிப்பு தொடர்பாகவும், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேச வேண்டும் எனவும், இந்த இரண்டு விஷயங்களைத் தொடர்ந்து மேற்கொண்டால் புதிய தமிழகம் கட்சி உரிய ஆதரவு அளிக்கும்" எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details