தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகா - தஞ்சைக்கு கோடை கால சிறப்பு ரயில்! எப்போ தெரியுமா?

By

Published : Mar 22, 2023, 8:02 AM IST

கோடைகால சிறப்பு ரயில் துவக்கம்

தஞ்சாவூர்: தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி வரை புதிய கோடைகால சிறப்பு ரயிலை எம்பி பழனிமாணிக்கம் தொடங்கி வைத்து ரயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதிகளான ஹுப்ளி பெல்காம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களுக்கு அதிகளவிலான மக்கள் வருகை தருகின்றனர்.

இதையடுத்து தஞ்சாவூரில் இருந்து பெல்காம் வரை நேரடி ரெயில் இயக்க வேண்டும் என பொது மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூரில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி, பெல்காம் வரை செல்லும் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்கி உள்ளாது. 

இந்த ரெயில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு ஹூப்ளியில் புறப்பட்டு தாவனகரே, தும்கூர், கிருஷ்ணராஜபுரம், பைப்பனஹள்ளி (பெங்களூரு), சேலம், கரூர், திருச்சி, பூதலூர் வழியாக தஞ்சாவூருக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 2.15 மணிக்கு வந்தடையும். 

மறு மார்க்கத்தில் இந்த ரெயில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தஞ்சாவூரிலிருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12.30 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. இதனால் பெங்களூர் செல்லும் ரயில் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எம்பி பழனிமாணிக்கம் கூறும்போது, "நீண்டகாலமாக மேற்கு நோக்கி செல்லும் ரயில் பயணிகளுக்கு போதிய அளவில் ரயில் சேவை இல்லை என்ற குறை இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் கோடைகால சிறப்பு ரயில் தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு விடப்பட்டுள்ளது. மக்களின் பயன்பாடு, வரவேற்பு ஆகியவற்றைப் பொறுத்து இதை நிரந்தரமாக்க ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து முயற்சி செய்வேன் என்றும், மேலும் இன்டர்சிட்டி ரயில் கேட்டுள்ளதாகவும், சோழன் விரைவு ரயிலை பகல் நேரத்தில் இரு மார்க்கமும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும்" தெரிவித்தார். 

ABOUT THE AUTHOR

...view details