தமிழ்நாடு

tamil nadu

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.65.25 லட்சம்!

By

Published : Mar 24, 2023, 9:22 PM IST

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.65.25 லட்சம்!

உலக பிரசித்திப் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு பல இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்றவற்றை கோயில் உண்டியலில் போட்டு வருகின்றனர். 

அதேநேரம் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு, கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வமுடைய பக்தர்களைக் கொண்டு காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச் 24) காலை முதல் கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் சுமார் 40‌க்கும் அதிகமானோர் கோயிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

இதில் 65 லட்சத்து 25 ஆயிரத்து 800 ரூபாய் பணமும், தங்கம் 112 கிராம், வெள்ளி 1,123 கிராம் மற்றும் 1,088 வெளிநாடு ரூபாய் நோட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த காணிக்கை எண்ணும் பணியினை திருவானைக் கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் ரவிசந்திரன், மேலாளர் தமிழ்செல்வி, கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், மீனாட்சி சரண்யா, துணை மேலாளர் தி.சண்முக வடிவு, ஆய்வாளர்கள் மங்கையர் செல்வி, பாஸ்கர் மற்றும் பானுமதி ஆகியோர் மேற்பார்வையிட்டனர். மேலும் உண்டியல் கணக்கிடும் பணி Srirangam Temple என்ற யூடியூப் சேனலில் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details