தமிழ்நாடு

tamil nadu

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 6:47 AM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை

மதுரை:அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ஆஃப் ரோட்டரி சங்கம் இணைந்து மதுரை எஸ்எஸ் காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவர் கோயிலில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சி பெரியவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, கோப்பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் உலகக் கோப்பை படங்கள் வைத்து அர்ச்சனை செய்து, தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க செயலாளர் எஸ் எஸ் சரவணன், பொருளாளர் கதிரவன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பெண்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details