தமிழ்நாடு

tamil nadu

MLA driving bus: திடீரென ஓட்டுநராக மாறிய சங்கரன்கோவில் எம்.எல்.ஏ

By

Published : Jul 14, 2023, 5:52 PM IST

திமுக எம்எல்ஏ ராஜா

தென்காசி:பொதுவாக வாகனங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. கண்மாய் கரை உடைப்பு ஆய்வு,  கிராமப்புற சாலை ஆய்வு ஆகியப் பணிகளுக்காக, அவரே டிராக்டரை ஓட்டி அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் முதல் திருநெல்வேலி செல்லும் 1 to 1 இடை நில்லா அரசுப் பேருந்து புதிய வழித்தடத்தில் இன்று தொடங்கப்பட்டது. அந்த வகையில் இன்று சங்கரன்கோவில் - திருநெல்வேலி இடையே அரசுப்பேருந்தின் இடைநில்லா பேருந்து (1 to 1) சேவையின் புதிய வழித்தடத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜா, பேருந்தை இயக்கி தொடங்கி வைத்துள்ளார்.

கழுகுமலை சாலையில் இருந்து சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் வரை பயணிகளை ஏற்றிச்சென்று பேருந்தை இயக்கி சங்கரன்கோவில் - திருநெல்வேலி இடையே இடைநில்லா பேருந்தின் புதிய வழித்தட சேவையினை தொடங்கி வைத்தார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்‍, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ராஜா, பின்னர் இடைநில்லா பேருந்து சேவையின் வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து பணிமனை மேலாளர் குமார், போக்குவரத்து வணிகம் மேலாளர் சுப்பிரமணி, தொமுச மாவட்ட அமைப்பு செயலாளர் நெல்சன், தொமுச பணிமனை கிளை செயலாளர் சங்கர் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details