தமிழ்நாடு

tamil nadu

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் திறப்பு!

By

Published : Dec 12, 2022, 12:05 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

திருவள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டிய நிலையில், ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.25 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,184 மில்லியன் கன அடியும் மற்றும் நீர் வரத்து 2,046 கன அடியாகவும் உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details