தமிழ்நாடு

tamil nadu

Delhi Floods: டெல்லியில் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மகாத்மா காந்தி நினைவிடம்!

By

Published : Jul 14, 2023, 8:31 PM IST

வெள்ள காடக காட்சியளிக்கும் மகாத்மா காந்தி நினைவிடம் !

டெல்லி:தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை 41 ஆண்டுகளில் இல்லாத கனமழை பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த சில தினங்களாக  யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை விட அதிகமாக செல்கிறது. வியாழக்கிழமை(ஜூலை 13) யமுனை நதியின் நீர்மட்டம் 208.57 மீட்டரைத் தொட்டது. டெல்லியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஐடிஓ, செங்கோட்டை போன்ற முக்கிய இடங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. 

இந்நிலையில், யமுனை ஆற்றங்கரைக்கு அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாத்மா காந்தி நினைவிடம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிப்பது காண்போரை அதிர்சியடைய செய்துள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசமா?...தொப்பி வாப்பாவின் அதிரடி ஆஃபர்!

ABOUT THE AUTHOR

...view details