தமிழ்நாடு

tamil nadu

குருவாயூரில் மலையாள சூப்பர் ஸ்டார்ஸ் உடன் பிரதமர் மோடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 2:09 PM IST

குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி

திருச்சூர்:பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் நடிகரும், பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.  

நேற்று காலை 7.35 மணியளவில் பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டர் குருவாயூர், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமரை பார்க்க குவிந்த நூற்றுக்கணக்கான பாஜக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள், பாஜக கொடிகளை அசைத்தும், கட்சி நிறங்களில் தொப்பிகள் அணிந்தும் பிரதமரை வரவேற்றனர்.  

பின்னர் அங்கிருந்து ஸ்ரீவல்சம் விருந்தினர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி, கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையான முண்டு மற்றும் வேஷ்டியை மாற்றிக் கொண்டு, பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.  

தொடர்ந்து நடிகரும், பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு, முன்னின்று மாலைகளை எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் திலீப் உள்ளிட்ட பல மலையாள சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொண்டனர்.  

கோபியின் மகள் திருமணத்தை முன்னிட்டு, காலையில் கோயிலில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் அனைவருக்கும் பிரதமர் இனிப்புகளை வழங்கி வாழ்த்தினார். இந்நிலையில், பிரதமர் வருகையை முன்னிட்டு கோயிலுக்கு, அதிகாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

ABOUT THE AUTHOR

...view details