தமிழ்நாடு

tamil nadu

Marimuthu demise: ஆதிகுணசேகரணை காண நெல்லையில் இருந்து வீல் சேரில் வந்த இரட்டை சகோதரிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 12:39 PM IST

ஆதிகுணசேகரணை காண வீல் சேரில் வந்த இரட்டை சகோதிரிகள்

தேனி:சென்னையில்நேற்று(செப். 8) மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பசுமலைதேரி கிராமத்திற்கு இன்று (செப் 9) அதிகாலை கொண்டுவரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகத் தொடரை நாள்தோறும் பார்த்து நடிகர் மாரிமுத்துவின் ரசிகராக மாறி இருந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கிங்ஸ்லி என்பவரின் மகள்களான மாற்றுத்திறனாளி சகோதரிகள் மெர்ஸ்லி மற்றும் ஆன்ஸ்லி ஆகியோர் தனது தாயாருடன் வீல் சேரில் அமர்ந்து வந்து மாரிமுத்துவின் உடலை காண பசுமலை தேர் கிராமத்திற்கு வந்தனர். 

அங்கு வைக்கப்பட்டு இருந்த மாரிமுத்துவின் உடலின் முன்பாக அமர்ந்து அஞ்சலி செலுத்தினர். மாரிமுத்து ஆதிகுணசேகராக நடித்த கதாபாத்திரம் மூலம் அனைவரது மனங்களை கவர்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மாரிமுத்துவின் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தை பார்த்து ரசிகைகளாக மாறிய இரட்டை சகோதரிகள் அவரது இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டும் என திருநெல்வேலியில் இருந்து வந்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

ABOUT THE AUTHOR

...view details