தமிழ்நாடு

tamil nadu

தேனி அருகே நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்; கிராமிய கலைஞர்களை பாராட்டிய ஓபிஎஸ்!

By

Published : Aug 6, 2023, 8:13 PM IST

தேனி அருகே பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய ஐம்பெரும் திருவிழா

தேனி: சிவசங்கரனார் முத்தமிழ் அறக்கட்டளையின் சார்பில் இரண்டாம் ஆண்டு ஐம்பெரும் விழா தேனி அருகே உள்ள நாகலாபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த ஐம்பெரும் திருவிழாவில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், பாரம்பரிய கலைஞர்களுக்கான விருது மற்றும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். முன்னதாக வில்லுப்பாட்டு உள்ளிட்ட கிராமிய இசை கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

விழாவில் தேனி மாவட்ட கிராமிய கலைஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரிசு பொருள்களுடன் அவர்களை கௌரவித்தார். விழாவில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கல்வியாளர்கள், கிராமப்புற கலைஞர்கள், மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details