தமிழ்நாடு

tamil nadu

Nilgiri Elephant: வாகனத்தை விரட்டிய யானைக்க்கூட்டம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

By

Published : Jul 10, 2023, 6:48 PM IST

நீலகிரி:வாகனத்தை விரட்டிய காட்டு யானைகள் :அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்!

நீலகிரி:கூடலூர், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியாகும். இப்பகுதிகளில் வனவிலங்குகள், குறிப்பாக காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதனிடையே, ஐயன் கொல்லி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே நேற்று இரவு 3 காட்டு யானைகள் சாலையில் உலா வந்தது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் யானைகளை பின்தொடர்ந்து சென்று வாகனத்தில் இருந்து ஒலி எழுப்பி விரட்டினர். அப்போது ஆத்திரமடைந்த யானைகள் வாகனத்தை துரத்தியது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் பின்னோக்கி வாகனத்தை இயக்கினர். இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அடிக்கடி இருப்பதால் வனத்துறையினர் அகழி வெட்ட வேண்டும் என்றும் கூடுதலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:விமானப்படை அதிகாரி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. சாலை தடுப்பில் கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..

ABOUT THE AUTHOR

...view details