தமிழ்நாடு

tamil nadu

Kodaikanal Flower Show: கொடைக்கானல் கோடை விழா.. குவியும் மக்கள் கூட்டம்!

By

Published : May 26, 2023, 4:16 PM IST

பூக்கள் மற்றும் காய்கறிகளால் வடிவமைக்கபட்டுள்ள உருவங்கள்

திண்டுக்கல்:கொடைக்கானலில் 60-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று துவங்கியது. இந்தக் கோடை விழாவைத் தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். அதில் முதன்மையாக வேளாண்துறை அமைச்சரான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் பாண்டா கரடி, வாத்து, ஒட்டகச்சிவிங்கி ஆகிய உருவங்கள் பல லட்சம் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் காட்டெருமை, வரிக்குதிரை, டோரா புஜ்ஜி பொம்மை ஆகிய உருவங்கள் காய்கறிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் முன்னாள் தமிழக முதலமைச்சர்களான காமராஜர், கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களது உருவங்கள் காய்கறிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவை சுற்றுலாப் பகுதிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. பூங்கா முழுவதும் பூத்துள்ள வண்ண வண்ண மலர்களைப் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க:ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி மாஸ்டர் பிளான்.. சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details