தமிழ்நாடு

tamil nadu

Courtallam: ஆர்ப்பரித்த குற்றால அருவிகளில் அலைமோதிய சுற்றுலாப் பயணிகள்!

By

Published : Jul 11, 2023, 11:43 AM IST

ஆர்பரித்த குற்றால அருவியில் அலைமோதிய சுற்றுலாப் பயணியர்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்து உள்ளன. தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தற்போது குற்றால சீசன் தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் குற்றாலத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். மேலும், இந்த குற்றால சீசனை முன்னிட்டு ஏராளமானோர் கரையோரப் பகுதிகளில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிகளை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களை விரும்பி வாங்கி உண்டு மகிழ்வதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். தற்போது விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளின் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.  

ABOUT THE AUTHOR

...view details