தமிழ்நாடு

tamil nadu

கோவை மெட்ரோ திட்டம் எப்போது ஆரம்பம்? - அமைச்சர் சொன்ன பதில்!

By

Published : Mar 25, 2023, 1:12 PM IST

Etv Bharat

கோவை: கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 13 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மார்ச்.25) பார்வையிட்டார். தொடர்ந்து முடிவடைந்த ஸ்மார்ட் சிட்டி வசதிகளை திறந்து வைத்தார். இதனிடையே கோவை கெம்பட்டி காலனி பிரதான சாலை பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 1.84 கோடி ரூபாய் மதிப்பிலான தார் சாலைகள் புதுப்பித்தல் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை தெற்கில் 13 இடங்களில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. 100 வார்டுக்களுக்கும் சாலைப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன். 193 கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒட்டு மொத்தமாக 223 கோடி ரூபாய் அளவில் நிதி ஒதுக்கி 70% பணிகள் முடிந்துள்ளன. இடையர் பாளையம் தடகம் பணிகள் விரைவில் முடிக்கப்படும். 

கோவை மெட்ரோ திட்டத்திற்கு DPR இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. கோவையின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வழங்கி வருகிறார். 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கும் வகையில் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. 

கோவையில் சாலைகள் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள் தான் சேதம் அடைந்து இருந்த நிலையில், அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட சாலைகள் மட்டும் தான் போடப்படவில்லை எனவும் அவை சரிசெய்யப்படும்" எனறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details