தமிழ்நாடு

tamil nadu

Mp kanimozhi gifted bangles: பெண் எம்பிக்களுக்கு வளையல்கள் பரிசளித்த கனிமொழி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 6:48 PM IST

மதுரை: பெண் எம்பிக்களுக்கு வளையல்கள் பரிசளித்த கனிமொழி எம்பி!

மதுரை: நாடாளுமன்ற நிலைக் குழுவினர் கனிமொழி தலைமையில் மதுரையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த எம்பி கனிமொழி, சக பெண் எம்பிக்களுக்கு வளையல்களை பரிசளித்தார்.

நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாடாளுமன்ற நிலை குழு சார்பாக எம்பி கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஆய்வை முடித்துவிட்டு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து வெளியே வந்தபோது எம்பி கனிமொழி உடன் ஆய்வு மேற்கொள்ள வந்த சக பெண் எம்பிக்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு வளையல், குங்குமம், மீனாட்சி அம்மன் படம் மற்றும் பூஜைப் பொருட்களை வாங்கி கொடுத்தார்.

மேலும், கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கனிமொழியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

ABOUT THE AUTHOR

...view details