தமிழ்நாடு

tamil nadu

Jailer Movie Release: வெளியானது ’ஜெயிலர்’.... திரையரங்குகளில் அலப்பறை செய்யும் ரஜினி ரசிகர்கள்!!

By

Published : Aug 10, 2023, 9:56 AM IST

திரையரங்குகளில் அலப்பறை செய்யும் ரஜினி ரசிகர்கள்

சென்னை:இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஜெயிலர் படத்தில் காவாலா, ஹுகும், ரத்தமாரே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஹுகும் பாடல் வரிகள் சமூக வலைதளங்களில் ரஜினி விஜய் ரசிகர்களிடையே யார் சூப்பர் ஸ்டார் என்ற விவாதத்தை உருவாக்கியது. 

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி இன்று காலை திரையிடப்பட்டது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி இன்று அதிகாலை திரையிடப்பட்டது. 

இந்நிலையில் ஜெயிலர் வெளியிட்டை முன்னிட்டு சென்னை ரோகிணி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதே போல் ஜெயிலர் படம் வெளியாகியுள்ள தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details