தமிழ்நாடு

tamil nadu

மது போதையில் பொது இடத்தில் ரகளை.. ஜெயிலர் பட வில்லன் அதிரடி கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 11:06 PM IST

ஜெயிலர் வில்லன் விநாயகன் கைது

எர்ணாகுளம்:ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அனைவரின் மனம் கவர்ந்த வில்லனாக உருவெடுத்தவர் பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவரது தனித்துவமான நடிப்பின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் உருவாக்கி கொண்டார்.

ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் வர்மன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் சினிமா மட்டுமின்றி உலக அளவில் தனக்கென ரசிகர்களையும் ஈர்த்து கொண்டார். மேலும் அடுத்த மாதம் வெளியாக உள்ள 'துருவ நட்சத்திரம்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளது, திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வழக்கு சம்பத்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்களிடம் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலிசாரின் பணிகளுக்கு இடையூறு அளித்ததாகவும், பொது இடத்தில் மது போதையில் அத்துமீறி நடந்து கொண்டதற்காகவும், விநாயகன் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details