தமிழ்நாடு

tamil nadu

காவிரி ஆற்றில் இருந்து பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு!

By

Published : Jul 27, 2023, 10:56 AM IST

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி, விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது விநாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  

மேலும், நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த தொடர் நீர்வரத்து காரணமாக காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் தொடர்ந்து மாவட்ட நிர்வாக ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details