தமிழ்நாடு

tamil nadu

”ஒரு 2000 ரூபாய் கூட அரசு டாஸ்மாக்கில் வாங்க மறுக்கின்றனர்”… மது பிரியர்கள் வேதனை

By

Published : May 30, 2023, 7:48 PM IST

”ஒரு 2000 ரூபாய் கூட அரசு டாஸ்மாக்கில் வாங்க மறுக்கின்றனர்”… மது பிரியர்கள் கவலை

திண்டுக்கல்: மத்திய அரசு புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்களது அடையாள ஆவணத்தினை காண்பித்து வங்கி கணக்கில் செலுத்தலாம் என அறிவித்திருந்தது.

இதற்கிடையே தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் டாஸ்மாக் கடைகளில் 2ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொள்ளப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை விற்பனையாளர்கள் வாங்க மறுக்கின்றனர்.

2ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கி கணக்கில் செலுத்த சென்றால் வாங்க மறுக்கிறார்கள் எனவும் பொதுமக்களிடமிருந்து வாங்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

“நாங்கள் 2ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுக்களையா டாஸ்மாக் கடைகளில் மாற்ற செல்கிறோம். நாங்கள் வைத்திருக்கும் ஒரு 2ஆயிரம் ரூபாய் நோட்டினை கூட அரசு நிறுவனமான டாஸ்மாக் நிர்வாகம் வாங்க மறுப்பது வேதனை அளிக்கிறது” என மது பிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் ஐ லியோனி -  அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details