தமிழ்நாடு

tamil nadu

மதுபான கடைகளில் 2000 ரூபாயை வாங்க மறுக்கும் ஊழியர்கள்!

By

Published : May 22, 2023, 10:54 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகளில் 2000 ரூபாயை வாங்க மறுக்கும் ஊழியர்கள்!!

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா கரூர் சாலையில் இரண்டு அரசு மதுபான கடைகளும், ஒட்டன்சத்திரம் சாலையில் ஒரு மதுபான கடையும் குங்கும காளியம்மன் கோயில் அருகே ஒரு மதுபான கடையும் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களாக இந்த மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எந்த மதுபான கடைகளுக்கும் அனுமதி இல்லாமல் நடைபெற்று வருவதாகவும், திமுக கட்சிக்குள் உள்கட்சி பூசல் நடப்பதால் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர் ஒருவரிடம் 2000 ரூபாய் கொடுத்து மது பாட்டில் கேட்டால் பணம் வாங்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் டாஸ்மாக்கில் பணத்தை வாங்க கூடாது என்று சொல்லவில்லை என்று பேட்டி அளித்தும், வேடசந்தூரில் செயல்படும் நான்கு மதுபான கடைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க மறுக்கின்றனர். 

நாங்கள் 2000 ரூபாய் வாங்கினாலும் வங்கிகளில் பணத்தை அவர்கள் வாங்க மறுக்கிறார்கள் என்றும் 2000 ரூபாய் பணம் வாங்க வேண்டும் என்று எந்த உத்தரவும் வரவில்லை என்று பகிரங்க வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவை மீதும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: உத்தமபாளையம் அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்

ABOUT THE AUTHOR

...view details