தமிழ்நாடு

tamil nadu

கொடைக்கானல் புலியூர் பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம் - வெளியான ட்ரோன் காட்சிகள்!

By

Published : Jul 16, 2023, 8:37 AM IST

கொடைக்கானல் புலியூர் பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம் - வெளியான ட்ரோன் காட்சிகள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவதும், அவ்வப்போது நகர் பகுதிக்குள் புகுந்து வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 

அது மட்டுமல்லாமல், விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட யானைகள் தங்களது குட்டிகள் உடன் முகாமிட்டுள்ளது. 

தொடர்ந்து அப்பகுதி முழுவதிலும் யானைகள் உலா வருவதால், கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகள், யானை எந்த பகுதியில் இருக்கிறது என்பது குறித்தும், அவை எங்கு இடம் பெயர்கிறது எனவும் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் செல்லாமல் தடுப்பதற்கு வனத்துறையினர் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details