தமிழ்நாடு

tamil nadu

"சாலை தரமாக இல்லை; அபாய எச்சரிக்கை பலகை எங்கே?" தருமபுரி எம்பி செந்தில்குமார் சரமாரி கேள்வி!

By

Published : Apr 22, 2023, 6:34 PM IST

சாலை பணிகளை ஆய்வு செய்த தருமபுரி எம்பி

தருமபுரி: தொப்பூரில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் வழியாக பவானி செல்லும் சாலை சேதம் அடைந்து அடிக்கடி விபத்து எற்பட்டு வந்தது. தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் செந்தில்குமார் ஆய்வு செய்து சாலையை மாநில நெடுஞ்சாலைதுறைக்கு மாற்றி சாலை அமைக்க மத்திய அரசிடம் 100 கோடி ரூபாய் நிதி பெற்று கொடுத்தார். 

சாலை அமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 21) ஆய்வு செய்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சாலையை தரமாக இல்லாததால் ஒப்பந்ததாரர் யார்? ஏன் இப்படி தரம் இல்லாமல் உள்ளது? முறையாக எச்சரிக்கை பலகை ஏன் வைக்கவில்லை? ஏன் இதை அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

சாலை ஓப்பந்ததாரர் எங்கே என கேட்டதற்கு மருத்துவமனையில் இருப்பதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். மீண்டும் கேட்டபோது வெளியூரில் இருக்கிறார் என்று கூறியாதால் கோபமடைந்த எம்.பி.செந்தில்குமார் மாற்றி மாற்றி பதில் கூற வேண்டாம் மீண்டும் ஆய்வு செய்ய வருவேன் அப்போது சாலை தரமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

இதையும் படிங்க:40 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி - அமைச்சர் அன்பில் மகேஷ்!

ABOUT THE AUTHOR

...view details