தமிழ்நாடு

tamil nadu

தேனி சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்.. சீறிப்பாய்ந்த மாடுகள்!

By

Published : Apr 12, 2023, 4:04 PM IST

இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம்

தேனி: கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் மற்றும் கை புறா எல்கை பந்தயத்தை நடத்தினர். இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலிருந்தும் மாடுகள், வண்டி மற்றும் சாரதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயம், தேன்சிட்டு, கரிச்சான், பூஞ்சிட்டு, புள்ளிமான், பெரிய மாடு என 5 வகையான பிரிவுகளில் உள்ள 180-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. மேலும் நடைபெற்ற கை புறா பந்தயத்தில் 18 மாடுகளும், மாடுபிடிக்கும் வீரர்களும் கலந்து கொண்டு மாட்டினை கையில் பிடித்து விரைவாக ஓடிச்சென்று 4 கிமீ எல்லை தொட்டனர். 

வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி வரை சுமார் 8 கிமீ தூரம் உள்ள சாலையில் நடைபெற்ற இந்த போட்டிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details