தமிழ்நாடு

tamil nadu

"மழையில் கரையும் சிமெண்ட் சாலை" - திருவண்ணாமலை மக்கள் புலம்பல் வீடியோ!

By

Published : Jun 6, 2023, 3:18 PM IST

திருவண்ணாமலையில் தரமற்ற சிமெண்ட் சாலை அமைக்கப்படுவதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி ஐந்தாம் வார்டு பகுதியில் சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாகவே இந்த சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை தரமற்றும், கைகளாலேயே பெயர்தெடுக்கப்படும் நிலையில் சாலைகள் அமைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் இத்தகைய தரமற்ற சிமெண்ட் சாலைகள் தங்களுக்கு வேண்டாம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 

தற்போது சிமெண்ட் சாலை அமைத்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக பெய்த மழையில் சிமெண்ட் சாலையில் உள்ள அனைத்து கற்களும் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனை அடுத்து அவசர அவசரமாக வந்த சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் அதே சாலையின் மீது மீண்டும் தண்ணீர் தெளித்து சிமெண்ட் கலவையை கொண்டு அவசர கதியில் சாலையை அமைத்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நகராட்சியின் சார்பில் அமைக்கப்படும் இந்த சிமெண்ட் சாலை உரிய தரம் இல்லாமல் அவசர கதியில் அமைக்கப்பட்டு வருவதால் தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும், இது போன்ற தரமற்ற சிமெண்ட் சாலைகள் அமைப்பது விட சாதாரண தார்சாலையே போதும் என்றும் அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details