தமிழ்நாடு

tamil nadu

CCTV: பவானிசாகரில் நாயை துரத்திய சிறுத்தை வீடியோ!

By

Published : Jan 28, 2023, 8:23 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ஈரோடு: பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி கல் உடைக்கும் கிரசர் கம்பெனிகள் இயக்கி வருகின்றன. வனத்தையொட்டி அமைந்துள்ள இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் சிறுத்தையைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், காவலுக்கு 5-க்கும் மேற்பட்ட காவல் நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு கிரசர் கம்பெனியில் படுத்துக்கொண்டிருந்த காவல் நாயை வனத்திலிருந்து வந்த சிறுத்தை பிடிக்க முயற்சித்தது. அப்போது நாய் சிறுத்தையை எதிர்த்துச் சண்டைபோட்டதைத் தொடர்ந்து சிறுத்தை பதுங்கியது.

சிறுத்தையைக் கண்ட அங்கிருந்த நான்கு காவல் நாய்கள் ஒரே நேரத்தில் குரைத்ததால் சிறுத்தையின் கவனம் திரும்பிய நிலையில், சிறுத்தை பிடியில் சிக்காமல் நாய் வேகமாக ஓடி உயிர்த் தப்பியது. இந்நிலையில், சிறுத்தை நாயைத் துரத்திய காட்சி அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details