தமிழ்நாடு

tamil nadu

பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்.. புதுக்கோட்டையில் சீறிப்பாய்ந்த காளைகள்!

By

Published : Apr 10, 2023, 12:45 PM IST

பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்… சீறிப்பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை: நெடுங்குடி அருகே உள்ள அம்பாள்புரத்தில் மனோன்மணி அம்மன் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் சிறிய மாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 

பெரிய மாட்டு வண்டியில் 7 ஜோடிகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு கல்லூர் வரை சென்று வர 12 கிலோமீட்டரும், சிறிய மாட்டு வண்டிக்கு கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வரை சென்று வர 9 கிலோமீட்டர் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டது. சாலையில் துள்ளிக்குதித்து போட்டிப் போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக 30,022 ரூபாயை புதுக்கோட்டை மாவட்டம் மாவூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசாக 25,002 ரூபாயைப் புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி கலை ஹாலோபிளாக் என்பவரது மாட்டு வண்டியும் மூன்றாவது பரிசை 20,002 ரூபாயைப் புதுக்கோட்டை மாவட்டம் ரித்தீஷ் என்பவரது மாட்டு வண்டி வென்றது. 

மேலும் நான்காவது பரிசாக 15,002 ரூபாயை, புதுக்கோட்டை மாவட்டம் பாளியைச் சேர்ந்த செல்வி என்பவரது மாட்டு வண்டியும் தட்டிச் சென்றது. இதேபோல் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. சாலை ஓரங்களில் இருபுறமும் பொதுமக்கள் கரகோஷங்களை எழுப்பியும், குழவை இட்டும் உற்சாகப்படுத்தினர்

ABOUT THE AUTHOR

...view details