தமிழ்நாடு

tamil nadu

மழை நீரில் மூழ்கிய ஆவடி காவல் நிலையம்.. ஜெனரேட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்றும் காவலர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 10:06 AM IST

மழை நீரில் மூழ்கிய ஆவடி காவல் நிலையம்

சென்னை:நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால், ஆவடி காவல் நிலையம் மழை நீரால் சூழ்ந்துள்ளது.ஆவடியில் தொடர் கனமழை காரணமாக, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளது. விடிய விடிய பெய்த இந்த கனமழை காரணமாக, சென்னையின் புறநகர் பகுதியான ஆவடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாள் பெய்த இந்த கனமழையால் ஆவடி பகுதியில் உள்ள காவல் நிலையம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவடி காவல் நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 

மழை நீரானது காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் சூழ்ந்துள்ளதால், காவலர்கள் உள்ளே இருக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் காவல் நிலையம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், காவல் நிலையத்தில் சூழ்ந்துள்ள தண்ணீரை ஜெனரேட்டர் மூலம் மோட்டார் கொண்டு காவலர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details