தமிழ்நாடு

tamil nadu

அப்துல் கலாம் நினைவு நாள்: ஓடிக்கொண்டே ஏபிஜே உருவத்தை வரைந்த ஆசிரியர்!

By

Published : Jul 27, 2023, 8:27 AM IST

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் செல்வம் என்பவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாள் முன்னிட்டும், கலாமின் கனவு காணுங்கள், மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளை மாணவர்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் கொண்டு சேர்க்கும் விதமாகவும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிக்கொண்டே அப்துல் கலாம் படத்தை வரைந்துள்ளதாக கூறி உள்ளார். 

மண்ணில் பிறந்த அனைவருமே மகான்களாக மறைவதில்லை, சாதாரண குடும்பத்தில் பிறந்த அனைவருமே சரித்திரம் படைத்ததில்லை. இந்தியாவின் கடை கோடியில் ராமேஸ்வரத்தில் மீனவ கிராமத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் உயரிய பதவியான குடியரசுத் தலைவராக தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் முன்னேறியவர். இந்த வகையில் இளைஞர்களுக்கு அவர் வாழ்ந்து காட்டி, வழிகாட்டியாகவும் செயல்பட்டு உள்ளார்.

2002ஆம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொக்ரான் அணு ஆயுத சோதனையில் பங்களித்தார். பின்பு அக்னி பிரித்வி ஆகாஸ் எனப்படும் ஏவுகணைத் திட்டங்களில் முக்கிய பங்காற்றினார். இந்தியாவிற்கென செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவிய பெருமைக்குரியவர், கலாம். 

ABOUT THE AUTHOR

...view details