தமிழ்நாடு

tamil nadu

"எங்க அமைச்சரை குறை கூறுவதா" - மாஜி அமைச்சர் வளர்மதியை விரட்டிய திமுகவினர்!

By

Published : Jun 6, 2023, 10:33 AM IST

முன்னாள் அமைச்சரை விரட்டிய திமுகவினர்

சென்னை:ஆலந்தூர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மின்வெட்டும், மின் உயர், தாழ் அழுத்தமும் ஏற்பட்டு வருகிறது. கோடை வெயில் கொளுத்துவதால், அதன் தாக்கம் தாங்காமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மின் வெட்டை சரி செய்யவும், கூடுதல் மின் மாற்றிகளை அமைக்க முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட செயலாளர் கந்தன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், ஆலந்தூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு வந்தனர்.  

அப்போது, மின்சார வாரிய செயற்பொறியாளர் கருப்பையாவைச் சந்தித்துத் தொடர் மின் வெட்டு பிரச்னையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த திமுக நிர்வாகிகள் மின்சார வாரிய அலுவலகம் முன் கூடி அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே முன்னாள் அமைச்சர் வளர்மதி, மீண்டும் மின்வெட்டு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறி வெளியேறினார்.  

அப்போது, திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. இதையடுத்து, திமுகவினரிடம் மக்கள் பிரச்னை குறித்துப் பேச வரும்போது, இப்படி தகராறில் ஈடுபடுவது நியாயம் இல்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, தனது கட்சி நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தினார்.இந்த தகவலறிந்து அங்கு விரைந்து வந்த பரங்கிமலை போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 

ABOUT THE AUTHOR

...view details