தமிழ்நாடு

tamil nadu

ஐஎஸ்ஐஎஸ் யாசிப் முசாப்தீன் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

By

Published : Mar 14, 2023, 10:39 PM IST

ஐஎஸ்ஐஎஸ் யாசிப் முசாப்தீன் கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

ஈரோடு மாவட்டம் மாணவிக்கம் பாளையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய சோதனையில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு உடன் தொடர்புடைய யாசிப் முசாப்தீன் என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இன்று (மார்ச் 14) இந்த வழக்கின் விசாரணைக்காக கோவை மத்திய சிறையில் இருந்து யாசிப் முசாப்தீன் பலத்த காவல்துறை பாதுகாப்பு உடன் அழைத்து வரப்பட்டார். 

இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகேசன் வழக்கை மீண்டும் இந்த மாதம் 30ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து யாசிப் முசாப்தீன் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது உபா சட்டம் உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஈரோட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - 7 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details