தமிழ்நாடு

tamil nadu

ரசத்தில் கொத்தமல்லி எங்கே? கடுப்பான திருப்பத்தூர் கலெக்டர்.. நடந்தது என்ன?

By

Published : Feb 15, 2023, 8:19 PM IST

Etv Bharat

திருப்பத்தூர் நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஜவ்வாது மலை புதுநாடு பகுதி, கல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வந்து 68 மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிதாக ஆட்சியராக பொறுப்பேற்ற பாஸ்கர பாண்டியன் பல்வேறு அதிரடி செயல்களில் செயல்பட்டு வருகிறார். ஆதிதிராவிட நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் இன்று (பிப்.15) மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவியர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் மாணவியர்களுடன் அமர்ந்து, "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்ற திருக்குறளைக் கூறி உணவு உட்கொண்டார். அப்போது ஆட்சியர் உட்கொண்ட ரச சாதம் தாளிக்காமலும் கொத்தமல்லி இல்லாமலும் இருந்ததால் சமையலரிடம், 'ஏன் ரசத்தில் கொத்தமல்லி இல்லை?' என கேட்டார்.

அதற்கு அவர், 'அவசர அவசரமாக உணவு செய்ததால் கொத்தமல்லி போடவில்லை' எனக் கூறியதால் கடுப்பான ஆட்சியர் இதுபோன்று திரும்பவும் நடந்தது என்றால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ஜெயக்குமார், அரசு அதிகாரிகள் மற்றும் விடுதி காப்பாளர்கள் சமையலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details