தலைவர் தரிசனம்.. விமான நிலையத்தில் நடிகர் ரஜினி.. மும்பையில் #Thalaivar170 சூட்டிங் நிறைவு!
Published : Oct 29, 2023, 4:58 PM IST
சென்னை:ஜெயிலர் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அவரது 170வது படத்தில் நடித்து வருகிறர். சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல், நடிகர் ரஜினியின் 170வது படத்தை இயக்குகிறார். தற்போது வரை அந்த படத்திற்கு பெயர் வைக்கப்படாததனால், தலைவர் 170 என்ற பெயரில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி, முதல்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ஓடு தயாரிக்கும் தொழில் கூடத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்நிலையில், தலைவர் 170 படப்பிடிப்பு ஷூட்டிங் மும்பையில் நிறைவு பெற்ற நிலையில், விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க:கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் இந்தியன் 2 க்ளிம்ப்ஸ் வீடியோ!