தமிழ்நாடு

tamil nadu

விண்வெளி '2020' - சோதனைகளுக்கு மத்தியில் சாதனை

By

Published : Dec 31, 2020, 8:28 PM IST

2020ஆம் ஆண்டு கரோனா பரவலால் ஏற்பட்ட தாக்கம் அளப்பரியவை. உயிரிழப்புகள், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி என கரோனா பெருந்தொற்று உலக நாடுகளை அசைத்து பார்த்துவிட்டது. இருப்பினும் அவை போட்ட முட்டுக்கட்டைகளை ஓரம் தள்ளி, விண்வெளி திட்டங்கள் இந்த ஆண்டு வெற்றியடைந்தன. பிரபல தொழிலதிபர் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் தயாரித்த டிராகன் எனும் விண்கலத்தை அங்கீகரித்து, முதன் முறையாக தனியாரின் விண்கலன் மூலம் தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியது நாசா. அதுமட்டுமல்லாமல் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளான வெள்ளியில் வேற்று கிரக உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு சாதனைகளும், வரும் காலத்தில் முக்கிய சாதனைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ABOUT THE AUTHOR

...view details