தமிழ்நாடு

tamil nadu

அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றுவதாக மு.க.ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்து - செல்லூர் ராஜூ

By

Published : Feb 3, 2022, 8:14 PM IST

பேரறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவுநாளையொட்டி, அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பேசிய அவர், 'அண்ணாவின் கொள்கையை திமுக பின்பற்றும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக, கேலிக்கூத்தாக உள்ளது. அண்ணாவின் கொள்கையை 49 ஆண்டுகளாக பின்பற்றுவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். அண்ணாவின் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கிறது. அதற்கு எம்.ஜி.ஆர் தான் காரணம். அண்ணாவின் புகழை அதிமுக எப்போது காக்கும்' எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details