தமிழ்நாடு

tamil nadu

ஆம்பூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள பாம்பு

By

Published : Apr 3, 2022, 8:03 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரது வீட்டில் இன்று(ஏப்.3) அதிகாலை சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்து உள்ளது. இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறி உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி வீட்டிற்குள் புகுந்து படமெடுத்து ஆடியபடி போக்கு காட்டிய 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக மீட்டு ஆம்பூர் அருகே உள்ள துருகம் கப்புகாடு பகுதியில் விட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details