தமிழ்நாடு

tamil nadu

’புதிய விடியலைக் காண வாக்காளர்கள் தயார்’ - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

By

Published : Apr 6, 2021, 12:10 PM IST

விருதுநகர் : வாக்குப்பதிவு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “ புதிய விடியலைக் காண வாக்காளர்கள் தயார்” என்றார்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, தனது சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில் வாக்கு செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளேன். வாக்காளர்களிடையே எழுச்சி தெரிகிறது. நான் கடந்து வந்த மக்களிடையே ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற ஆவலைப் பார்த்தேன்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

ஸ்டாலின் தலைமையில் ஒரு புதிய விடியலை காண வாக்காளர்கள் தயாராகி விட்டனர் என்பதை இன்றைய வாக்குப்பதிவு உணர்த்துகிறது. திருச்சுழி தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவேன்” என்றார்.

இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சுமந்துசென்ற கழுதைகள்

ABOUT THE AUTHOR

...view details