தமிழ்நாடு

tamil nadu

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

By

Published : Jun 2, 2021, 10:13 PM IST

விருதுநகர்: தளர்வுகளற்ற ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கத்தினர் நிவாரணப் பொருள்கள் வழங்கினர்.

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

தமிழ்நாடு அரசு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கூலித் தொழிலாளர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன்னார்வலர்கள் பலரும் முன்வந்து தங்களால் முடிந்த உதவிகளைப் பொதுமக்களுக்குச் செய்து வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம்

அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பசியால் வாடும் மக்களுக்கு அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, இன்று (ஜூன்.02) ஊரடங்கால் வருமானமின்றி சிரமப்பட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணத் தொகுப்புகளை வழங்கி விஜய் ரசிகர்கள் நெகிழ வைத்துள்ளனர். அந்தத் தொகுப்பில், அரிசி, காய்கறி ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் இருந்தன.

நிவாரணப் பொருள்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

இந்நிகழ்விற்கு, விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் வெயிலு முத்து, துணைத் தலைவர் சுகந்த் ஆகியோர் தலைமையேற்றனர். நகர் மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய 45 நிறுவனங்கள் விருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details