தமிழ்நாடு

tamil nadu

'கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சடாரி, தீர்த்த பிரசாதம் வழங்குக!'

By

Published : Dec 13, 2020, 11:29 AM IST

விருதுநகர்: கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சடாரி, தீர்த்த பிரசாதம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள சடகோப ராமனுஜ ஜீயர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

srivilliputhur
srivilliputhur

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சடகோப ராமனுஜ ஜீயர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், “மார்கழி மாதம் வரப்போகிறது. டிசம்பர் 25 வைகுண்ட ஏகாதேசி வரப்போகிறது. இப்போது இருக்கக்கூடிய காலகட்டங்களில் அனைத்து கோயில்களிலும் காலை 4 மணியளவில் கோயில்களைத் திறந்து அந்தந்த கோயிலின் ஆகம விதிகளுக்கு ஏற்றபடி பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி, பக்தர்களுக்கு தீர்த்தமும் ஜடாரியும் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

கரோனாவைக் காரணம் காட்டி தீர்த்த பிரசாதம், ஜடாரியை பக்தர்களுக்கு வழங்குவதை கோயிலில் நிறுத்திவைத்துள்ளனர். தீர்த்த பிரசாதத்தில் பலவிதமான மூலிகைகள் இருக்கின்றன. வருகின்ற வைகுண்ட ஏகாதசிக்கு எந்தவித தடையும் இல்லாமல் பக்தர்கள் எளிய முறையில் பெருமாளை தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சடாரி மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்க வேண்டும்- சடகோப ராமனுஜ ஜீயர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மார்கழி மாத கடைசி 10 நாள்கள் எண்ணெய் காப்பு சாத்துதல் உற்சவ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருமுக்குகுளத்திலுள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் வைத்து நடைபெறும்.
அதேபோல் இந்தாண்டும் உற்சவம் நடைபெற வேண்டும். எண்ணெய் காப்பு மண்டபத்திற்கு பக்தர்கள் வந்து ஆண்டாளை தரிசித்து சந்தோஷப்பட வேண்டும். அரசு திருமுக்குளத்தை சீரமைக்க உத்தரவிட வேண்டும்.
இது குறித்து முதலமைச்சரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதற்கு அடுத்து உரிய அனுமதி வாங்கி பக்தர்கள் அனைவரும் சேர்ந்து போராடுவோம்” என்று ஜீயர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details