தமிழ்நாடு

tamil nadu

Sattur Village people: ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால்..? கிராம மக்கள் எச்சரிக்கை!

By

Published : Dec 24, 2021, 10:05 PM IST

ஒரு மாத காலத்திற்குள் தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தங்களது குடும்ப அட்டைகளைத் திரும்ப ஒப்படைப்போம் என்று Sattur படந்தால் கிராம பொதுமக்கள் அரசு அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால், Sattur Village people warn govt official
Sattur Village people warn govt official

விருதுநகர்மாவட்டம் Sattur அருகிலுள்ள படந்தால் கிராமம் வளர்ந்து வரும் பகுதியாகும். இப்பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதைச் சுற்றியுள்ள பெரியார் நகர், வைகோ நகர், தென்றல் நகர் உள்ளிட்டப் பகுதிகளும் வளர்ந்து வரும் பகுதியாக இருந்து வருகின்றன.

இப்பகுதியில் முறையான சாலை வசதிகளும் வடிகால் வசதி மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏதும் இல்லை என்றும்; அதனைச்செய்து தரக்கோரி பஞ்சாயத்து நிர்வாகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை செய்யப்படவில்லை என்று கூறியும் அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாத்தூர் யூனியன் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கச் சென்றனர்.

கிராம மக்கள் எச்சரிக்கை

அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் திட்ட மேலாளரிடம் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர்.

அப்பொழுது பொதுமக்கள் திட்ட மேலாளரிடம் தங்களது குறைகளைக் கூறி முற்றுகையிட்டதால் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

’ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால்..’

அதன் பின்னர் திட்ட மேலாளர், தங்களது குறைகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னும், பொதுமக்கள் ஒரு மாத காலத்திற்குள் தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களது குடும்ப அட்டைகளைத் திரும்ப ஒப்படைப்போம் என்று கூறி கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: Vadivelu affected Covid 19: வடிவேலுவிற்குக் கரோனா - என்ன நிகழ்ந்தது?

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details