தமிழ்நாடு

tamil nadu

சாத்தூரில் ரம்ஜான் நோன்பு முதல் நாள் தொடக்கம்!

By

Published : Apr 14, 2021, 8:57 PM IST

விருதுநகர்: சாத்தூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பு முதல் நாள் தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் நோன்பு முதல் நாள் தொடக்கம்
ரம்ஜான் நோன்பு முதல் நாள் தொடக்கம்

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கும் என சென்னை தலைமை ஹாஜி நேற்று முன்தினம் அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் தலைபிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து நோன்பு தொடங்கலாம் என பள்ளிவாசல்களில் நேற்றிரவு (ஏப்.13) அறிவிக்கப்பட்டது.

aதன்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் நோன்பிற்கான தராவீஹ் தொழுகை நடத்தினர். சாத்தூர் ஜாமியா பள்ளிவாசல் மஜ்ஜிதே நூர் பள்ளிவாசல், வெங்கடாசலபுரம், அஞ்சு மனை ஜாமியா பள்ளிவாசல் பெரிய கொல்லபட்டி உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் இரவு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் நோன்பு முதல் நாள் தொடக்கம்

கரோனா பரவல் காரணமாக ரமலான் தொழுகை கடந்தாண்டு நடைபெறவில்லை. இந்நிலையில் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைப் பின்பற்றி தொழுகைக்கு வர வேண்டுமென பள்ளிவாசல்களில் அறிவிக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி தராவீஹ் தொழுகை நடந்தது. 30 நாள் நோன்பு நிறைவுக்கு பின் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: ரமலான் நோன்பை தொடங்கிய வேலூர் மத்திய சிறை கைதிகள்!

ABOUT THE AUTHOR

...view details