தமிழ்நாடு

tamil nadu

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு!

By

Published : Aug 25, 2020, 10:41 PM IST

விருதுநகர்: ராஜபாளையம் அருகே முகவூர் தொண்டைமான் குளத்தில், மீன் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் காட்டுப் பகுதியில் விட்டனர்.

மீன் வலையில் சிக்கிய 10 அடி மலைப்பாம்பு: காட்டுப்பகுதியில் விட்ட வனத் துறை!
10 feet Python caught

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் தொண்டமான் குளத்தில் அப்பகுதியில் சிலர் மீன் பிடிப்பதற்காக நேற்றிரவு மீன்வலை போட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஆக.25) சென்று பார்த்தபோது மீன் வலையில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

தொண்டைமான் குளம் அருகே குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. 7ஆவது முறையாக மலைப்பாம்பு நடமாட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details