தமிழ்நாடு

tamil nadu

பாலியல் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

By

Published : Dec 8, 2020, 6:25 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூரில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

பாலியல் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை
பாலியல் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள தம்மநாயக்கண்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் 2014ஆம் ஆண்டு, தொலைக்காட்சியில் கார்ட்டூன் படம் காண்பிப்பதாக கூறி, 10 சிறுமிகளை தனது வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், தங்கவேலுவை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போஸ்கோ நீதிமன்ற நீதிபதி பரிமளா, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தங்கவேலுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அதாவது, தங்கவேலு இயற்கை மரணம் அடையும்வரை, தான் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற தண்டனையும், ரூ. 2 லட்சத்து 45 ஆயிரம் அபராதமும் விதித்தும், அதிகம் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப் பரிந்துரை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : சேலம் 8 வழிச்சாலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு: வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details