தமிழ்நாடு

tamil nadu

’வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நடுங்க...’; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

By

Published : May 10, 2021, 10:26 PM IST

விருதுநகர் : ராஜபாளையத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

’வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நடுங்க...’; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
’வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நடுங்க...’; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகிறது. இதில் நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த பல அரிய மரங்களும் அடக்கம். ஏற்கனவே காலநிலை மாற்றம், காற்று மாசுபாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்ஸிஜன் தரக்கூடிய மரங்களை வெட்டுவது வேதனையளிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமக மரங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டு அதனை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க : அப்பாவு, பிச்சாண்டி போட்டி!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details