தமிழ்நாடு

tamil nadu

‘நாட்டுப்பற்று இல்லாத திமுகவிற்கு வாகா எல்லையில்தான் பயிற்சியளிக்க வேண்டும்'

By

Published : Aug 17, 2019, 6:01 PM IST

விருதுநகர்: ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தீவிரவாத நிலைப்பாட்டை எடுத்த திமுகவிற்கு வாகா எல்லையில்தான் பாதுகாப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக சாடியுள்ளார்.

minister rajendhira balaji

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியிலுள்ள கண்மாய் தூர்வாரும் பணியை பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அச்சங்கோயில்-பம்பை வைப்பாறு இணைப்புத் திட்டம் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதால் கூடிய விரைவில் அத்திட்டம் செயல்படுத்தபடும். தமிழ்நாட்டில் கடந்த 50ஆண்டு கால வரலாற்றில் எந்த முதலமைச்சரும் செய்யாத சாதனையை எடப்பாடி பழனிசாமி படைத்து விடுவார் என்ற ஆதங்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தை குறை கூறி வருகிறார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

திமுகவினர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் அனைவர் முன்பும் சாடுவது, அதன்பின் நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு ஜால்ரா அடிக்கும் செயலை செய்வது என இருந்து வருகின்றனர். மேலும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் திமுக தீவரவாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆகையால் இந்திய தேசியத்தின் பாதுகாப்பில் அரசியல் செயதுவரும் அவர்களுக்கு இந்தியா எல்லையான வாகாவில் பாதுகாப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு நாட்டின் மீது பற்று ஏற்படும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலை பொருத்துவரை போட்டியிடுவதற்கே அமமுகவில் வேட்பாளர்கள் இல்லை. நடிகர் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டுதான் அரசியலுக்கு மீண்டும் திரும்புவார்" என்று கிண்டலடித்தார்.

Intro:விருதுநகர்
17-08-19

திமுகவினருக்கு வாகா எல்லையில் பாதுகாப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு சுதந்திர உணர்வு வரும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சாடல்Body:திமுக இந்திய தேசியத்தின் பாதுகாப்பில் அரசியல் செய்கிறது திமுகவினருக்கு இந்தியா எல்லையான வாகாவில் பாதுகாப்பு பயிற்சி அளிக்க வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு சுதந்திர உணர்வு வரும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியிலுள்ள கண்மாய் தூர்வாரும் பணியினை பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அச்சங்கோவில் - பம்பை வைப்பாறு இணைப்புத் திட்டம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். தமிழகத்தில் 50 ஆண்டு கால வரலாற்றில் எந்த முதல்வரும் செய்யாத சாதனையை எடப்பாடி பழனிச்சாமி படைத்து விடுவார் என்ற ஆதங்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரின் அமெரிக்க பயணத்தை குறை கூறி வருகிறார் எடப்பாடி வெற்றிக் கொடி அமெரிக்காவில் நாட்டப்படும். அதிமுகவிற்கு நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டது அதிமுக திமுக பிரிவினையை தூண்டும் கட்சி. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை. திமுக இந்திய தேசியத்தின் பாதுகாப்பில் அரசியல் செய்கிறது திமுகவினர்கள் இந்தியா எல்லையான வாகாவில் பாதுகாப்பு பயிற்சி அளிக்க வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு சுதந்திர உணர்வு வரும். நடிகர் கமலின் கட்சி மழையில் முளைத்த காளான் போன்றது. அந்த கட்சிக்கு கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திவருகிறார் அதை முடித்து விட்டு அரசியலுக்கு மீண்டும் வருவார் என்றார்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details